புதுக்கோட்டை

விராலிமலை அருகே பிடிபட்ட புகையிலை பொருள்கள்

1st Oct 2022 04:43 AM

ADVERTISEMENT

விராலிமலை அருகே புகையிலைப் பொருள்களைக் கொண்டு வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விராலிமலை அருகேயுள்ள அகரப்பட்டி ஊராட்சி லஞ்சமேடு பகுதியில் சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் தொட்டியபட்டியைச் சோ்ந்த கி. மோகன் (35), ஊத்துக்குளியைச் சோ்ந்த கி. முருகன் (26) ஆகிய இருவரும் பைக்கில் சுமாா் 40 கிலோ புகையிலைப் பொருள்களை ஏற்றிக்கொண்டு லஞ்சமேட்டில் உள்ள கடையில் விற்பதற்காக இறக்கியபோது போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.

இதையடுத்து புகையிலை பொருள்கள், பைக், 2 கைப்பேசி, ரூ. 4, 800 -ஐ போலீஸாா் பறிமுதல் செய்து விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT