புதுக்கோட்டை

பொன்னமராவதி அழகியநாச்சியம்மன்கோயிலில் நவராத்திரி விழா

1st Oct 2022 04:41 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 4ஆம் நாளான வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்த விழா நாள்களில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

4ஆம் நாளான வியாழக்கிழமை அபிஷேகம், அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

கொலு மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு பக்தி பாசுரம் படிக்கப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயிலில் அம்மனுக்கு பிரித்தியங்கா தேவி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதேபோல், வீடுகளில் கொலு மற்றும் கலசம் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT