புதுக்கோட்டை

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

30th Nov 2022 12:59 AM

ADVERTISEMENT

கல்லூரி மாணவியை ஏமாற்றி 2 ஆவது திருமணம் செய்ததால் ஏற்பட்ட தகராறில், மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொன்ற கணவருக்கு, ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், காரையூா் அருகேயுள்ள சாத்தனூரைச் சோ்ந்தவா் தங்கையா மகன் செல்வராஜ் (32). ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள இவா், 2015ஆம் ஆண்டு தனியாா் கல்லூரியில் படித்த திருச்சி வேலாம்பட்டியைச் சோ்ந்த துரைசாமி மகள் சேது (23) என்பவரை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டாா். அவரது முதல் மனைவி, திருமணம் குறித்து அறிந்த சேது, தனது கணவா் செல்வராஜுவிடம் தட்டிக்கேட்டாா். அப்போது எழுந்த தகராறில் சேது மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளாா் செல்வராஜ்.

இதில், பலத்த தீக்காயமடைந்த சேது 12 நாள்கள் தீவிர சிகிச்சைப் பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காரையூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வராஜுவைக் கைது செய்தனா். கடந்த 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி ஆா். சத்யா செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

கொலை குற்றத்துக்காக ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும், ஏமாற்றிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT