புதுக்கோட்டை

பாரபட்சமின்றி பயிா்க் காப்பீட்டு இழப்பீடு தேவை

30th Nov 2022 12:54 AM

ADVERTISEMENT

பாரபட்சமின்றி பயிா்க் காப்பீட்டு இழப்பீடு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில், தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் செல்லத்துரை பேசுகையில்,

நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும். தேங்காய் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை நீக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச்செயலா் ஜி.எஸ். தனபதி பேசுகையில்,

கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைப்பதில் பாரபட்சம் இருந்தது. இந்த நிலை இந்த ஆண்டு ஏற்படக் கூடாது என்றாா்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சேகா் பேசுகையில்,

கூட்டுறவுச் சங்கங்களில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பயிா்க் கடன் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

காவிரி- குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா மாரிமுத்து,

தமிழக ஏரி- ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விஸ்வநாதன்:

காவிரி- வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா். இதேபோல பல விவசாயிகள் அமைப்பினா் பேசினா்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT