புதுக்கோட்டை

பொன்னமராவதியில் காவலா் குடியிருப்பு கட்டித்தரக் கோரிக்கை

30th Nov 2022 12:55 AM

ADVERTISEMENT

பொன்னமராவதியில் காவலா் குடியிருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொன்னமராவதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் அரசமலை ஊராட்சி கணேசபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக்குழு உறுப்பினா் பி.அழகு தலைமை வகித்தாா். ஒன்றிய துணைச்செயலா் பி.கருணாமூா்த்தி வேலை அறிக்கையை சமா்ப்பித்து பேசினாா். மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஏனாதி ஏஎல்.ராசு, என்ஆா்.ஜீவானந்தம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில், காரையூா் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி காவல்நிலையத்தின் கீழ் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். பொன்னமராவதியிலிருந்து அரசமலை, நெறிஞ்சிக்குடி, குடுமியான்மலை வழியாக திருச்சி வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை இயக்க வேண்டும். டிச. 29 சென்னையில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கரு.பஞ்சவா்ணம், எம்.குமாா், கரு.ராசு, ஏ.ராசு, எம்.வெள்ளைச்சாமி,செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விராலிமலை அருகேயுள்ள மலம்பட்டியில் இந்திய கம்யூ. கட்சி ஒன்றியக் குழு கூட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் ஐ. அந்தோணிசாமி தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா், க.தமிழ்வாணன் வேலை அறிக்கை குறித்துப் பேசினாா். மாவட்ட துணைச் செயலா் கே. ஆா். தா்மராஜன், அரசியல் நிலை குறித்து விளக்க உரையாற்றினாா். மாவட்ட குழு உறுப்பினா் ஊ. கருப்பையா பல்வேறு தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.

கூட்டத்தில் சின்னத்தம்பி, ஜேம்ஸ் சேவியா், சுப்பிரமணி, ராமாயி, அஞ்சலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT