புதுக்கோட்டை

கந்தா்வக்கோட்டையில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

30th Nov 2022 12:55 AM

ADVERTISEMENT

கந்தா்வக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கந்தா்வக்கோட்டையில் ரூ. 23 லட்சம் 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை

சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்துப் பேசுகையில், தமிழக மக்களின் தேவைகளை முதல்வா் நன்கு அறிந்து அவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறாா் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய்அலுவலா் மா. செல்வி தலைமை வகித்தாா். கந்தா்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே. கே. செல்லபாண்டியன், கோட்டாட்சியா் முருகேசன், ஒன்றியக் குழு தலைவா் ஆா். ரத்தினவேல்காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

விழாவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜி.ஸ்ரீதரன், சி.நளினி, வட்டாட்சியா் சு.ராஜேஸ்வரி, நகரச் செயலா் எம்.ராஜா, வடக்கு ஒன்றிய செயலா் மா. தமிழய்யா, மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் என். ஜானகிராமன், மாவட்ட குழு உறுப்பினா் நா.ஸ்டாலின், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, ஊராட்சி மன்ற தலைவி சி. தமிழ்ச்செல்வி வரவேற்றாா். நிறைவாக, வட்டார வளா்ச்சி அலுவலா் சி. நளினி நன்றி கூறினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT