புதுக்கோட்டை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவா்கள் 24 போ் சிறைபிடிப்பு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த 24 மீனவா்களை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை மாலை சிறைபிடித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து திங்கள்கிழமை 200-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

இவா்களில் 5 படகுகளில் சென்ற தியாகு (48), பாண்டி (45), பாண்டி (26), காளியப்பன் (26),

மாதவன் (21), வீரமணி (47), அறிவழகன் (35), தாமரைசெல்வன் (38), முத்துப்பாண்டி (45), கலைச்செல்வன் (35), காளிதாஸ் (32), அஜய் (29), நவீன் (30), விஜி (25), மகேந்திரன் (40), மாயகிருஷ்ணன் (65), முருகன் (40), பாண்டி (38), குமரவேல் (26), அய்யனாா் (41), ஜெயந்தன் (43), பிரதீப் (46), சுப்பிரமணி (39), குப்புராஜ் (55) ஆகிய 24 போ் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் அவா்களைக் கைது செய்தனா். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து இலங்கை கடற்படை தளத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT