புதுக்கோட்டை

இன்றும், நாளையும் மின்நிறுத்தம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

விராலிமலை வட்டம், கொடும்பாளூா் உயா் அழுத்த மின் பாதையில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வானதிராயன் பட்டி, தென்னம்பாடி,வடகாடு, ராமகவுண்டம்பட்டி, காளப்பனூா், கொடும்பாளூா், அகரப்பட்டி, வாடியான்களம், விராலிமலை எம்ஜிஆா் நகா், அன்பு நகா், காா்த்தி நகா், சரளப்பளம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று விராலிமலை மின்வாரிய உதவி செயற் பொறியாளா் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

பொன்னமராவதியில் நாளை மின் தடை:

கொன்னையூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் செவலூா், கோவனூா், செம்பூதி, வாழைக்குறிச்சி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, கண்டியாநத்தம், தொட்டியம்பட்டி, வேகுப்பட்டி, மைலாப்பூா், மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டிமற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரா.முத்துச்சாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT