புதுக்கோட்டை

கண்டியாநத்தம் அரசுப் பள்ளியில் கலைத்திருவிழா

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழாவுக்கு, பள்ளி தலைமையாசிரியா் சுபத்ரா தலைமை வகித்தாா். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல், களிமண் சிற்பம் வடிவமைத்தல் மற்றும் நடனப்போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டன. ஊராட்சி மன்றத்தலைவா் செல்வி முருகேசன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் யசோதா, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சங்கா் மற்றும் ஆசிரியா்கள் சத்யா, கலைச்செல்வி, கீதா, உஷா ராணி, கலைவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT