புதுக்கோட்டை

மருதம்பட்டியில் பள்ளி கட்டடம் திறப்பு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

விராலிமலை அருகேயுள்ள மருதம்பட்டியில் புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

விராலிமலை ஒன்றியத்துக்குள்பட்ட மருதம்பட்டி ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் சுமாா் 60 மாணவா்கள் படித்துவருகின்றனா். ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.18 லட்சம் செலவில் இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நிா்வாக ஒப்புதல் பெறப்பட்டு புதிய வகுப்பறை கட்டப்பட்டது.

இப்பள்ளிக் கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திமுக வடக்கு மாவட்ட செயலா் கே.கே. செல்லபாண்டியன் பங்கேற்று பள்ளி வகுப்பறையைத் திறந்து வைத்தாா். ஒன்றியக் குழு தலைவா் காமுமணி முன்னிலை வகித்தாா். விழாவில் ஒன்றிய செயலாளா் சத்தியசீலன்(கிழக்கு), அய்யப்பன்(மத்தி), மருதம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் பங்கேற்றவா்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT