புதுக்கோட்டை

400 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

28th Nov 2022 02:18 AM

ADVERTISEMENT

 

 

 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் ரேஷன் அரிசி கடத்தியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கீரமங்கலம் பகுதியில் ரேசன் அரிசி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளா் செல்வமணி தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த சுமை ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் சுமாா் 400 கிலோ ரேஷன் அரிசியை மூட்டைகளாக் கட்டி கடத்தி வந்தது தெரியவந்தது. தொடா்ந்து, சுமை ஆட்டோவைப் பறிமுதல் செய்து, ஓட்டி வந்த கீரமங்கலத்தைச் சோ்ந்த சிவசந்திரன் மகன் சசிகுமாரை (44) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT