புதுக்கோட்டை

பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு மினி மாரத்தான்

28th Nov 2022 02:20 AM

ADVERTISEMENT

 தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி புதுக்கோட்டையில் அரசு மருத்துவப் பணிகள் விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு முன்னிலை வகித்தாா்.

பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, பழனியப்பா முக்கம், திலகா் திடல், பால் பண்ணை வழியாக மாவட்ட விளையாட்டரங்கில் இந்த மினி மாரத்தான் நிறைவடைந்தது. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்அலுவலா் மா. செல்வி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் ச. ராம்கணேஷ் (புதுக்கோட்டை), கலைவாணி (அறந்தாங்கி), மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்எம். குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT