புதுக்கோட்டை

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்

28th Nov 2022 02:19 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய, நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் புதிய வாக்காளா் சோ்ப்பு, பெயா் நீக்கம், தொகுதி மாற்றம், வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண் இணைப்பு பணிகள் ஆகியவை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை முகாமில் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் அன்பரசி, வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் மகேஸ்வரி, கல்யாணி, சிவானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

இதேபோல் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் மையங்களை வட்டாட்சியா் சு. ராஜேஸ்வரி நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

                                              

                                                                                                               

   

                                                       

ADVERTISEMENT
ADVERTISEMENT