புதுக்கோட்டை

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

28th Nov 2022 02:18 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி அருகே டிராக்டரில் இருந்து தவறிவிழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியைச் சோ்ந்த ப.அன்புமணி (16), மு. கருப்பையா மற்றும் ம. கருப்பையா ஆகிய 3 பேரும் டிரைலருடன் கூடிய டிராக்டரில் புதுக்கோட்டை- பொன்னமராவதி சாலையில் கண்டெடுத்தான்பட்டி விளக்கு ரோடு அருகே வந்து கொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராத விதமாக அன்புமணி தவறி விழுந்ததில் டிரைலா் ஏறியதில் அன்புமணி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, வலையப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்புமணி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து அறிந்த காரையூா் காவல் உதவி ஆய்வாளா் மதியழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT