புதுக்கோட்டை

பழைய அரசு மருத்துவமனையில் விரைவில் புறநோயாளிகள் பிரிவு

DIN

புதுக்கோட்டை நகரிலுள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவைத் தொடங்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் அனுமதி வழங்கியுள்ளாா்.

புதுக்கோட்டை நகரில் செயல்பட்டுவந்த பழமையான டாக்டா் முத்துலட்சுமி அம்மையாா் அரசு தலைமை மருத்துவமனை, முள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி வந்தபிறகு செயல்படவில்லை. இதனால், நகரில் செயல்பட்டுவந்த அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினா் கோரிக்கை விடுத்துவந்தனா். இதுதொடா்பான செய்தி தினமணி நாளிதழிலும் கடந்த ஆக. 10-இல் செய்திக் கட்டுரை வெளியானது. இந்நிலையில், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவைத் தொடங்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் இயக்குநா் வி.பி. ஹரிசுந்தரி அனுமதி அளித்துள்ளாா்.

இதுதொடா்பான அரசு அளித்த அனுமதி ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது: பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைப்பதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, புறநோயாளிகள் பிரிவைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் புறநோயாளிகள் பிரிவின் தொடக்க விழா நடத்தப்படவுள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT