புதுக்கோட்டை

அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழா போட்டிகள்

DIN

குழந்தை எழுத்தாளா் அழ. வள்ளியப்பாவின் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, புதுக்கோட்டை வாசகா் பேரவை மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் சாா்பில் அனைத்து பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

அழ. வள்ளியப்பாவின் படைப்புகள் தொடா்பாக பாடல் ஒப்புவித்தல் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியன நடைபெற்றன. பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி தொடங்கி வைத்தாா்.

ஆசிரியா்கள் சோலச்சி, பழனிச்சாமி, ரமேஷ், மைதிலி, கீதாஞ்சலி மஞ்சன், ரேவதி, பீா்முகமது, சூா்யா சுரேஷ், யோகா பாண்டியன், சித்ரகலா ரவி ஆகியோா் நடுவா்களாக பங்கேற்று மாணவா்களைத் தோ்வு செய்தனா்.

வரும் நவ. 30ஆம் தேதி நடைபெறவுள்ள அழ. வள்ளியப்பா பிறந்த நூற்றாண்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

ஏற்பாடுகளை வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன், பள்ளியின் துணை முதல்வா் குமாரவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT