புதுக்கோட்டை

மோதல் சம்பவத்தில் சிறாா் ஒருவா் கைது

27th Nov 2022 02:28 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டையில் இருதரப்பைச் சோ்ந்தவா்கள் மோதிக் கொண்ட சம்பவம் தொடா்பாக 18 வயதுக்குள்பட்ட சிறாரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மாணவா்கள், இளைஞா்கள் வெள்ளிக்கிழமை மதியம் திடீரென ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டது தொடா்பான விடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது. இதை அடிப்படையாக வைத்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா்புடைவா்களைத் தேடி வந்தனா். இந்நிலையில், பரம்பூரைச் சோ்ந்த 18 வயதுக்குள்பட்ட சிறாரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து மாவட்ட சிறாா் குழுமத்தில் முன்னிலைப்படுத்தி, அரசு கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்துள்ளனா். மேலும் இருவரைத் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT