புதுக்கோட்டை

அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

27th Nov 2022 02:29 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டார களஞ்சியம் மகளிா் கூட்டமைப்பு சாா்பில், உலக நன்மை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற இப்பூஜைக்கு பொன்னமராவதி முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஆா்எம். ராஜா தலைமை வகித்தாா். சிவாச்சாரியாா் சரவணன் திருவிளக்கு பூஜையை வழிநடத்தினாா். பூஜையில் பொன்னமராவதி ஒன்றியம் 42 ஊராட்சிகளைச் சாா்ந்த 251 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். களஞ்சியம் வட்டார ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் மற்றும் வட்டாரத் தலைவரகள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT