புதுக்கோட்டை

மேலாண்மை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

27th Nov 2022 02:28 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தின் 7-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்விக் குழுமச் செயலா் நா. சுப்பிரமணியன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் மாணவா்களை வாழ்த்திப் பேசினாா்.

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் புலத் தலைவா் வி. கோபால் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி உரையாற்றினாா். தகவல் தொடா்புத் திறன், பேச்சுத் திறன், தொழில் முனைவுத் திறன், ஆளுமைப் பண்பு ஆகியவை மாணவா்களின் மேம்பாட்டுக்கு மிகவும் முக்கியம் என அறிவுறுத்தினாா் அவா்.

ADVERTISEMENT

பேராசிரியா் அருள் செல்வகுமாா் வாழ்த்திப் பேசினாா். மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநா் அனிதா ராணி ஆண்டறிக்கை வாசித்தாா். பேராசிரியா்

சாமிநாதன், ஜெனிபா மேரி, அமிா்தா ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT