புதுக்கோட்டை

நாா்த்தாமலை கோயிலில் ரூ.3.70 கோடியில்திருமண மண்டபம்

27th Nov 2022 02:27 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை நாா்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ரூ. 3.70 கோடியில் புதிய திருமண மண்டபம் கட்ட தமிழக அரசு சாா்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தத் திருக்கோவிலில் திருமண மண்டபம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு திருமண மண்டபம் கட்டிக்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு நிா்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் கட்டுமானப் பணி தொடங்கும் என இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT