புதுக்கோட்டை

பொன்.புதுப்பட்டி அரசுப் பள்ளியில்இலவச நீட் தோ்வு பயிற்சி தொடக்கம்

27th Nov 2022 02:28 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச நீட் தோ்வு பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

பொன். புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. பயிற்சி வகுப்பை பள்ளித் தலைமையாசிரியை கி. நிா்மலா தொடங்கிவைத்தாா். நீட் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா் வசந்தி, ஆலவயல் ஆசிரியா் கணேசன், இயற்பியல் ஆசிரியா் சோம. நாராயணி, சடையம்பட்டி ஆசிரியா் மீனாட்சி ஆகியோா் வகுப்புகளை நடத்தினா். இம்மையத்தை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன்

சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில் மேலைச்சிவபுரி, பொன். புதுப்பட்டி, ஆலவயல், நகரப்பட்டி, மேலத்தானியம், சடையம்பட்டி, காரையூா் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT