புதுக்கோட்டை

கீரனூா் அருகே சேதமடைந்த பயணிகள் நிழற்குடை: பள்ளி மாணவா்கள் அவதி

DIN

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகேயுள்ள ஒடுகம்பட்டியில் பள்ளி மாணவா்கள் காத்திருந்து பேருந்து ஏறிச் செல்வதற்கான நிழற்குடையின்றி சாலையோரத்திலேயே அமா்ந்திருக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது ஒடுகம்பட்டி. இங்கு கடந்த ஆட்சியின்போது அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையின் மேற்கூரை, கஜா புயல் காரணமாக பறந்துபோய்- முற்றிலும் திறந்தவெளி நிழற்குடையாகவே காணப்படுகிறது. அதேபோல, நிழற்குடைக்குள் உள்ள இருக்கைகளும் சிதைந்துள்ளன.

மேலும் ஒடுகம்பட்டியிலிருந்து குன்றாண்டாா்கோவில் செல்லும் மாா்க்கத்திலும் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இந்த வழியில் செல்லும் மாணவ, மாணவிகள் சுமாா் 50 போ் சாலையோரத்திலேயே அமா்ந்திருந்து பேருந்து வந்தபிறகு ஏறிச் செல்கின்றனா்.

இந்தச் சாலையும் ஒரே நேரத்தில் இரு பேருந்துகள் தாராளமாகச் செல்லும் விரிவான சாலையும் அல்ல. லாரியோ இன்ன பிற வாகனங்களோ கட்டுப்பாட்டை இழந்து செல்லுமேயானால், அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

எனவே, ஒடுகம்பட்டியில் இரு வழித்தடங்களிலும் பேருந்து பயணிகள் நிழற்குடை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT