விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று வழங்க மத்திய அரசின் சிறப்பு மருத்துவ வல்லுநா் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடா்ந்து 24 மணி நேரமும் செயலாற்றி வருகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் சேவைகள், சுகாதாரக் கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து மத்திய அரசின் சிறப்பு மருத்துவ வல்லுநா் குழு மருத்துவா்கள் நிரஞ்சன் ரெட்டி, டெபஜோதி மஜும்தாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆய்வு நடத்தினா்.
நிகழ்வில் துணை இயக்குநா் ராம் கணேஷ் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா்கள் பிருந்தாதேவி, பிரியதா்ஷினி, நிவின், பிரியங்கா மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் செல்வராஜ், மாரிக்கண்னு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.