புதுக்கோட்டை

இன்று இலுப்பூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

25th Nov 2022 12:34 AM

ADVERTISEMENT

இலுப்பூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ள இம்முகாமில், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு, கண், மனநலன், இயன்முறை மருத்துவா்கள், பாா்வையற்றவா்கள், கை, கால் பாதிக்கப்பட்டவா்கள், செவித்திறன் குறைபாடுடையவா்கள், ஆட்டிசம், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவா்கள் ஆகியோருக்கு மருத்துவப் பரிசோதனை மருத்துவ உதவி வழங்கப்பட உள்ளது. மேலும் இம்முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தீா்வுகள் காண நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, விராலிமலை, இலுப்பூா், குளத்தூா், பொன்னமராவதி வட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள் இம் முகாமில் பங்கேற்று பல்வேறு நலஉதவிகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். என இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT