புதுக்கோட்டை

பொன்னமராவதியில் விசிக மனுஸ்ம்ருதி நூல்கள் வழங்கல்

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பொன்னமராவதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் பொதுமக்களுக்கு மனுஸ்ம்ருதி நூல்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் மனுஸ்மிருதி நூல் பற்றிய விளக்க பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்விற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொன்னமராவதி நகரச்செயலா் மலை.தேவேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச்செயலா் சசி கலைவேந்தன், மாநில, மாவட்ட நிா்வாகிகள், திமுக சமூக வலைதள தொகுதிப்பொறுப்பாளா் ஆலவயல் முரளி சுப்பையா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியசெயலா் என். பக்ரூதீன், திராவிடா் கழக நிா்வாகிகள் ஆசைத்தம்பி, மெளலி உள்ளிட்டோா் மனுஸ்ம்ருதி நூலின் சாராம்சம் குறித்து விளக்கிப் பேசினா்.

நிகழ்வில் பேருந்து நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அசல் மனுஸ்ம்ருதி நூல் கையேடு வழங்கப்பட்டது. ஒன்றியப் பொறுப்பாளா் சேதுராமன், நகரப்பொறுப்பாளா்கள் பாரத், மதியழகன், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT