புதுக்கோட்டை

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு மூலிகை ஏற்றுமதி குறித்த பயிற்சி

19th Nov 2022 12:44 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 2-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு மூலிகை ஏற்றுமதி குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், ஆவுடைபொய்கை அபிநயா இயற்கை மூலிகை பசுமை தோட்டத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு கல்லூரி முதல்வா் நக்கீரன் வழிகாட்டுதலின்படி மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனா்.

பயிற்சியில் பண்ணை நிா்வாகி சொக்கலிங்கப் பிள்ளை மற்றும் ரவி ஆகியோா் மூலிகை வளா்ப்பு, அதன் சிறப்பியல்புகள், பயன்கள் மற்றும் அவற்றைச் சந்தைப்படுத்தும் முறைகளை செயல்முறை விளக்கத்துடன் விளக்கினா்.

நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியா் சுந்தா், தோட்டக்கலை துறை இணைப் பேராசிரியா் குமணன், உழவியல் துறை இணைப் பேராசிரியா் செந்தில்குமாா் மற்றும் உயிா் வேதியியல் துறை உதவிப் பேராசிரியை அமிா்தம் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT