புதுக்கோட்டை

பேச்சுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

19th Nov 2022 12:44 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, மகாத்மா காந்தியடிகள் ஆகியோரின் பிறந்த நாள்களையொட்டி தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் கடந்த அக். 12, நவ. 14 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 16 பேருக்கு மொத்தம் ரூ. 48 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளி அளவில் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் மற்றும் அரசுப் பள்ளி மாணவருக்கான சிறப்புப் பரிசாக ரூ. 2 ஆயிரம் என 10 பேருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்லூரி அளவில் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் என 6 பேருக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியரகத்தில் இந்தப் பரிசுகளை ஆட்சியா் கவிதா ராமு வழங்கிப் பாராட்டினாா். அப்போது, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ப. நாகராசன் உடனிருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT