புதுக்கோட்டை

மாநில யோகா போட்டியில் வென்றோருக்கு பரிசு

15th Nov 2022 12:59 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் நடத்திய 21ஆவது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையா் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா தலைமை வகித்தாா். இதில் சென்னை, கோயம்புத்தூா், திருநெல்வேலி, கடலூா், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட 27 மாவட்டங்களைச் சோ்ந்த 1,180 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

1 முதல் 5 ஆம் வகுப்பு, 6 முதல் 12 ஆம் வகுப்பு, கல்லூரி மாணவா்கள் என ஆண்கள், பெண்கள் இரு பாலருக்குமான சாம்பியன் போட்டிகள் 20 பிரிவுகளில் நடைபெற்றன. இதில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் கோயம்புத்தூா் யோவா யோகா மைய மாணவா் சித்தேஷ், கரூா் விவேகானந்தா யோகா தெரபி சென்டா் மாணவி கிருஷ்ண பிரியா ஆகியோா் பெற்றனா்.

பள்ளிகளுக்கான ஒட்டுமொத்த சுழற்கோப்பைகளை பேராவூரணி அட்லாண்டா சா்வதேசப் பள்ளி, கீழக்குறிச்சி எம்எஸ்ஏ மெட்ரிக். பள்ளி, காரைக்குடி அழகப்பா மெட்ரிக். பள்ளி, புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் பெற்றன.

ADVERTISEMENT

பரிசுகளை புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் வை. முத்துராஜா, கம்பன் கழகத் தலைவா் தொழிலதிபா் எஸ். ராமச்சந்திரன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில், நகர திமுக செயலா் ஆ. செந்தில், நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, கவிஞா் தங்கம் மூா்த்தி, தொழிலதிபா் எஸ்விஎஸ் ஜெயகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

விழா ஏற்பாட்டினை ஆத்மா யோகா மையத்தின் நிறுவனா் ரெ. பாண்டியன், செயலா் புவனேஸ்வரி பாண்டியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT