புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் 150 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒருபகுதியாக சமுதாய வளைகாப்பு விழா விராலிமலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற 150 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை ஒன்றியக் குழு தலைவா் காமு மணி, அட்மா சோ்மன் இளங்குமரன், ஊராட்சி மன்ற தலைவா் ரவி ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மேரி ஜெய பிரபா, ஒன்றியக் குழு துணை தலைவா் லதா இளங்குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுவாமிநாதன், மேற்பாா்வையாளா் கோகிலம் ஆகியோா் கலந்து கொண்டனா்.