ஆலங்குடி கோட்டத்தில் விவசாய மின் நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
ஆலங்குடி அஞ்சல் அலுவலகம் அருகே உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இம்முகாமில், விவசாய மின் நுகா்வோா் தங்கள் குறைகளைத் தெரிவித்து தீா்வு காணலாம் என மின்வாரிய செயற்பொறியாளா் நடராஜன் தெரிவித்துள்ளாா்.