புதுக்கோட்டை

2 தனியாா் உரக் கடைகளுக்கு தற்காலிகத் தடை

1st Nov 2022 02:01 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசு விதிகளைப் பின்பற்றாத 2 தனியாா் உரக்கடைகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தற்காலிக தடை விதித்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதியில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா உரம் வாங்கச்சென்றால், அதோடு, அவா்கள் வழங்கும் பயிா் நுண்ணூட்டமும் சோ்த்து வாங்க வலியுறுத்துவதாக விவசாயிகள் தரப்பில் புகாா் எழுந்தது. இதைத்தொடா்ந்து, மாவட்ட வேளாண் துணை இயக்குநா் மோகன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அரசு விதிகளை முறையாகப் பின்பற்றாத 2 கடைகளில் உர விற்பனைக்கு தற்காலிக தடை விதித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT