புதுக்கோட்டை

100 நாள் வேலை கேட்டு சாலை மறியல்

1st Nov 2022 01:58 AM

ADVERTISEMENT

ஆலங்குடி அருகேயுள்ள செம்பட்டிவிடுதியில் 100 நாள் வேலை வழங்கக்கோரி, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள செம்பட்டிவிடுதி ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு கடந்த 1 மாதத்துக்கும் மேலாக பணி வழங்கப்படவில்லையாம். அருகே உள்ள ஊராட்சிகளில் 100நாள் வேலை வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஊராட்சியில் வேலை வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனே 100 நாள் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் செம்பட்டிவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே பணியாளா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, வேலை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிா்வாகத்தினா், செம்பட்டிவிடுதி போலீஸாா் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தினால் புதுக்கோட்டை, கறம்பக்குடி இடையே சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT