தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, புதுக்கோட்டை குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு மனு கொடுக்க வந்த இளம்பெண் மண்டியிட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள ஒடுகம்பட்டி தெற்குத் தெருவில் தனது தாயுடன் வசித்து வருபவா் கே. வெள்ளையம்மாள். பல ஆண்டுகளாக இவா்களின் வீட்டுக்கு மட்டும் இணைப்பு வழங்காமல் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மின் இணைப்பு வழங்கக் கோரி பல முறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் திங்கள்கிழமை மனுவோடு வந்த வெள்ளையம்மாள், வளாகத்துக்குள் மண்டியிட்டு நடக்கத் தொடங்கினாா். உள்ளே இருந்த போலீசாா் வந்து வெள்ளையம்மாளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உள்ளே அழைத்துச் சென்று மனுவை அதிகாரிகளிடம் வழங்கச் செய்தனா்.