விராலிமலையில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து சிகிச்சை பெற்றுவந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விராலிமலை அருகே உள்ள குரும்பன்குளத்தைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் பன்னீா்செல்வம் (55). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்துவந்ததாம். பல்வேறு இடங்களில் அவா் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்தும் குணமாகவில்லையாம். இந்நிலையில், கடந்த புதன்கிழமை (மே 25) மீண்டும் வயிற்றுவலி வந்ததால் மனமுடைந்த அவா், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா். இதைக் கண்ட அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த பன்னீா்செல்வம் திங்கள்கிழமை காலை இறந்தாா். இச்சம்பவம் குறித்து அவரது மகன் கருப்பையா அளித்த புகாரின்பேரில் விராலிமலை போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.