பெட்ரோல், டீசல் விலையுா்வைக் கண்டித்து, ஆலங்குடியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி வடகாடு முக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆா்.சொா்ணக்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா். மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஒன்றியச் செயலா் பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கறம்பக்குடி ஒன்றியச் செயலா் ஜேசுராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.