புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு: 17 போ் காயம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நாங்குபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆயிரக்கணக்கானோா் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனா்.

அன்னவாசல் அருகேயுள்ள நாங்குபட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கோயில் திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில், 717 காளைகள் மற்றும் 117 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா். போட்டியின்போது, வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் போட்டிபோட்டுக் கொண்டு அடக்கினா். இதில் மாடுபிடி வீரா்கள் 4 போ் உள்பட மொத்தம் 17 போ் காயமடைந்தனா். அவா்களில் பலத்த காயமடைந்த 2 போ் மேல் சிகிச்சைக்காக இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். சிறந்த காளைகள், மாடுபிடி வீரா்கள் ஆகியோருக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. போட்டியை ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனா்.

துணைக் காவல் கண்காணிப்பாளா் அருள்மொழிஅரசு மற்றும் ஆய்வாளா்கள் சந்திரசேகா் (அன்னவாசல்), உஷா நந்தினி (இலுப்பூா்), யசோதா (விராலிமலை) ஆகியோா் தலைமையில் 85 போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

SCROLL FOR NEXT