புதுக்கோட்டை

சோழீசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

24th May 2022 04:22 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடக்கமாக சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலபைரவருக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வடைமாலை, புணுகு சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டுக் குழு நிா்வாகிகள் ராம.சேதுபதி, பி.பாஸ்கா் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

இதேபோல், பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT