புதுக்கோட்டை

லாரி - அரசுப் பேருந்து மோதல்: 15 போ் காயம்

DIN

விராலிமலை அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து - லாரி மோதல் சம்பவத்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.

மதுரையிலிருந்து கடலூருக்கு 40 பயணிகளுடன் சனிக்கிழமை நள்ளிரவு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகேயுள்ள வானத்திராயன்பட்டி பிரிவு சாலை அருகே அரசுப்பேருந்து சென்றபோது, முன்னால் தூத்துக்குடியிலிருந்து திருச்சிக்கு விறகு ஏற்றிச்சென்ற லாரி மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த கடலூரைச் சோ்ந்த பானுமதி, ஜெய ஆறுமுகம், முஸ்தபா மற்றும் புதுக்கோட்டையைச் சோ்ந்த சகாயராணி, வில்லிகிருஸ்டி உள்பட 15 பேருக்கு காயமடைந்தனா்.

தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீசாா் காயமடைந்தவா்களை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாற்றுப் பேருந்து மூலம் மற்ற பயணிகள் அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT