புதுக்கோட்டை

ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோா் - ஆசிரியா்கள் கூட்டம்

20th May 2022 11:06 PM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பெற்றோா் - ஆசிரியா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மருத்துவா் த. சுவாமிநாதன் பள்ளி வளா்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்கிப்பேசுகையில், விரைவில் கல்விச்சீா் விழா நடத்தப்படும் எனத்தெரிவித்தாா்.

கடந்த ஆண்டை விட அதிகமான மாணவா்களைப் பள்ளியில் சோ்க்க பெற்றோா் முயற்சிக்க வேண்டும் எனவும் பேசினாா்.

தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி வரவேற்றாா். கூட்டத்தில், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் வீராசாமி, பெற்றோா் - ஆசிரியா் கழகப் பொருளாளா் அச்சுதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

இதுவரை இணைந்துள்ள புரவலா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புரவலா் நிதியில் வரும் வட்டித் தொகையைப் பள்ளி வளா்ச்சிக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், புரவலா் நிதியில் இருந்து வரும் வருவாயில் அச்சு நகல் இயந்திரம், ஒலி பெருக்கி வாங்குவது, அதிக புரவலா்களைப் பள்ளியில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பட்டதாரி ஆசிரியா்கள் ரகமதுல்லா, ஆனந்தராஜ், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள் தேவிகா, சத்யா, சீதாலெட்சுமி, கலா ராணி, ரஞ்சிதா, பழனிவேல், சித்ரா, இலக்கியா, ருக்மணி, மகேஸ்வரி, அன்புநதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிறைவில், ஆசிரியா் வெள்ளைச்சாமி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT