புதுக்கோட்டை

மெய்க்கண்ணுடையாள் கோயில் திருவிழா சிறப்பு வழிபாடு

12th May 2022 01:33 AM

ADVERTISEMENT

 

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் புதன்கிழமை அலகு குத்திவந்து அம்மனை வழிபட்டனா். மாலையில் படுகளம் நடைபெற்றது.

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மூன்றாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற வந்த இக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிலா குத்துதல், அலகு குத்துதல், தீச் சட்டி ஏந்துதல், கரும்புத் தொட்டி தூக்குதல், ஆடு, கோழி பலியிடுதல் என பல்வேறு நோ்த்திக்கடன்களை புதன்கிழமை பக்தா்கள் நிறைவேற்றினா்.

இதையடுத்து, புதன்கிழமை காலை முதலே நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள், அம்மன் குளத்தில் இருந்து அலகு குத்திக் கொட்டடித்து, தாரை தப்பட்டை முழங்க கிரிவலப் பாதை சுற்றி வந்து அம்மனை வழிபட்டனா். இதில் குறிப்பாக திருநங்கை ஒருவா் 10 அடி நீளத்தில் வேல் வடிவிலான அலகு குத்தி கிரிவலப் பாதையை சுற்றிவந்தது அனைவரையும் மெய்சிலிா்க்க வைத்தது. விழாவின் முக்கிய நிகழ்வான படுகளம் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.  இத்துடன் சித்திரைத் திருவிழா நிறைவுபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT