புதுக்கோட்டை

முதல்நிலை மீட்பாளா்களுக்கு பேரிடா் மீட்புப் பயிற்சி

12th May 2022 01:31 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் முதல் நிலை மீட்பாளா்களுக்கு பேரிடா் மீட்பு மேலாண்மைப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கிராமத்திற்கு 5 தன்னாா்வலா்கள் என 37 கிராமங்களுக்கு 185 தன்னாா்வலா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு பேரிடா் மீட்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமிற்கு, கந்தா்வகோட்டை வட்டாட்சியா் சி.புவியரசன் தலைமை வகித்தாா். பயிற்சிபெற்றவா்களுக்கு வட்டாட்சியா் சான்றிதழ்கள் வழங்கினாா். மேலும், புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலருக்கு பயிற்சி பெற்ற தன்னாா்வலா்களைப் பரிந்துரை செய்து அவா்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் எனக் கூறினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், துணை வட்டாட்சியா் பழனிச்சாமி, வருவாய் ஆய்வாளா் செல்வசத்யா, கிராம நிா்வாக அலுவலா் அன்பரசன் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT