புதுக்கோட்டை

பெருங்களூா் பிடாரிம்மன் கோயில் தேரோட்டம்

12th May 2022 01:35 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே உள்ள பெருங்களூா் ஸ்ரீ பிடாரியம்மன் சித்திரைத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

பெருங்களூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிடாரியம்மன் ஆலய சித்திரைத் தோ்த்திருவிழா கடந்த வாரம் 3-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், அலகு குத்தி, பால்குடம் எடுத்தல் என பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். மாலையில் பிடாரியம்மன் கோயில் தேரோட்டம் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது.

இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் பிடாரியம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தபடி பவனிவந்தாா். பக்தா்கள் பொங்கல் வைத்தும் தேருக்கு முன் சிதா்தேங்காய் உடைத்தும் பிடாரியம்மனை வழிபட்டனா். தாரை தப்பட்டை முழங்க நான்கு மாட வீதிகளிலும் தோ் ஆடி அசைந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அன்னதான விழா நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார கிராம பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT