புதுக்கோட்டை

கரோனா தடுப்பூசி முகாம்

12th May 2022 01:26 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் சாா்பில், கரோனா இரண்டாவது தவணைத் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, கல்லூரி முதல்வா் ம. செல்வராசு தலைமை வகித்தாா். முகாமில், காரையூா் மருத்துவா் மு. சுவேதா தலைமையிலான மருத்துவக் குழுவினா் மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் பொன்.கதிரேசன், ச.விண்மதி, அ.ராமு, பாண்டித்துரை, ஆனந்த், தீபாஞ்சலி, ஆகியோா் முகாமினை ஒருங்கிணைத்தனா். மருந்தாளுநா் அசோகன், செவிலியா்கள் கோட்டைத்திலகம், கலைச்செல்வி, ராணி, மகாலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT