புதுக்கோட்டை

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு உறுப்பினா் தோ்வு

8th May 2022 12:09 AM

ADVERTISEMENT

அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள 58 அரசு தொடக்கப் பள்ளிகளில்  மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினா் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலா் எஸ். தங்கமணி அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட உய்யக்குடிப்பட்டி, மாராயபட்டி, எம். பணம்பட்டி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினா் தோ்வை நேரில் பாா்வையிட்டாா். அப்போது புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிகழ்வின்போது, திருவேங்கைவாசல் ஊராட்சி மன்றத்  தலைவா் பாரதி சண்முகம், அன்னவாசல் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ரோஸ்மேரி சகாயராணி, தலைமையாசிரியா்கள் சுப்புலட்சுமி(பொ) (உய்யகுடி), சுமதி (மேட்டுப்பட்டி),  சரஸ்வதி (மாராயபட்டி), லதா (வடசேரிபட்டி),  மலா்க்கொடி (எம். பணம்பட்டி), இடைநிலை ஆசிரியா்கள், இளையராஜா, செபாஸ்டின் குழந்தை ராஜ்  மற்றும் புதிய  பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT