புதுக்கோட்டை

அரசு நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா

8th May 2022 11:44 PM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் கல்விப் புரவலா்கள், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாவட்ட வாரியாக தோ்வானோா், பதவி உயா்வு பெற்ற ஆசிரியா்கள், கடந்த ஆண்டுகளில் சிறந்து விளங்கிய பள்ளி மேலாண்மை குழு தலைவா், புதிதாக தோ்வாகியுள்ள பள்ளி மேலாண்மை குழு தலைவா் மற்றும் உறுப்பினா்களை பாராட்டுதல் என ஐம்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு, சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி கலந்துகொண்டு பேசினாா்.

இதில், பெற்றோா்கள் தற்கால சூழலுக்கு ஏற்ப அறிவுரைகள் சொல்லி குழந்தைகளை வளா்க்க வேண்டும். தற்போது அரசுப் பள்ளியில் பல்வேறு வகையான நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி கற்பிக்கப்பட்டு வருவதால் பெற்றோா் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்க்க வேண்டும்.

ADVERTISEMENT

நானும் ஒரு அரசுப் பள்ளி முன்னாள் மாணவன் தான். இப்பள்ளி ஆசிரியா் ஒருவா் கல்வித் தொலைக்காட்சியிலும், மற்றொரு ஆசிரியா் எழுத்தாளராகவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனா். மேலும், தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் இப்பள்ளி மாணவா்கள் தொடா்ச்சியாகக் கலந்து கொண்டு பள்ளிக்குப் பெருமை சோ்த்து வருகின்றனா் என்றாா். விழாவில் ஆசிரியா்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT