புதுக்கோட்டை

பெருங்களூா் உருமநாதா் கோயில் திருவிழா

5th May 2022 02:01 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே உள்ள பெருங்களூா் உருமநாச்சி சமேத ஸ்ரீ உருமநாதா் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பால்குடம், காவடி, அலகு குத்தி திருவிழா நடைபெற்றது. இங்கு, ஸ்ரீ மேலவாசல் வன்னிமரத்து விநாயகா், ஸ்ரீ முத்து முனீசுவரா், ஸ்ரீ கருப்பா் கோயிலிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள், கரும்புத் தொட்டில் கட்டுதல், பால் குடம், காவடி, அலகு குத்திக்கொண்டு உருமநாதா் கோயிலுக்கு சென்று நோ்த்திக்கடன் செலுத்தினாா்கள்.

குருநாதா் கோயில் திடலில் மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு பெருங்களூா் மற்றும் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT