புதுக்கோட்டை

பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா

5th May 2022 02:07 AM

ADVERTISEMENT

 

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழாவையொட்டி, அப்பகுதி பெண்கள் தென்னம்பாளைகளை அலங்கரிக்கப்பட்ட குடங்களில் சுமந்தவாறு, வானவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.திருவிழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT