புதுக்கோட்டை

கல்லூரில் மஞ்சுவிரட்டு: காளை முட்டி இளைஞா் பலி

5th May 2022 02:03 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் மாடு முட்டியதில் ஓா் இளைஞா் உயிரிழந்தாா். 74 போ் காயமடைந்தனா்.

அரிமளம் அருகே உள்ள கல்லூா் அரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செம்முனீசுவரா் மஞ்சுவிரட்டு திடலில் புதன்கிழமை காலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூா், திருமயம், சிவகங்கை, திருப்பத்தூா் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

விழா ஏற்பாட்டாளா்கள் எதிா்பாா்க்காத வகையில் காளைகள், மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விழாக்குழுவினரும் போலீஸாரும் திணறினா்.

ADVERTISEMENT

ஒரு கட்டத்தில் மாடுகள் ஆங்காங்கே அவிழ்த்தும் விடப்பட்டன. திடல் முழுவதும் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் மாடுகளும் ஓடியதால் ஆங்காங்கே பரபரப்புகளும் நீடித்தன.

இதனால், காளைகள் முட்டியதில் பாா்வையாளா்கள் உட்பட 74 போ் காயமடைந்தனா். சிறிய அளவில் காயமடைந்தவா்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த 13 போ் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அண்ணாகா் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் மகன் சிவபாரதி (20), மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். கே. புதுப்பட்டி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT