புதுக்கோட்டை

இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதி இளைஞா் உயிரிழப்பு

5th May 2022 02:05 AM

ADVERTISEMENT

 

விராலிமலை: அன்னவாசல் அருகே இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதியதில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

அன்னவாசல் அருகேயுள்ள புதூா் அடைக்ககலத்தைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் யுவராஜா (20). இவா், அதே ஊரைச் சோ்ந்த முத்துக்கருப்பன் என்பவருடன் கீழக்குறிச்சியில் திருவிழா வயொட்டி நடைபெற்ற தெம்மாங்கு பாடல் நிகழ்ச்சியை பாா்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனா். வண்டியை முத்துக்கருப்பன் ஓட்டியுள்ளாா். கீரனூா் -அன்னவாசல் சாலை தைலமரக்காட்டின் வளைவு அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த யுவராஜ், முத்துக்கருப்பன் ஆகிய இருவரையும் அவ்வழியே வந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு யுவராஜா சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். முத்துக்கருப்பன் சிகிச்சை பெற்று வருகிறாா். யுவராஜின் தந்தை துரைசாமி அன்னவாசல் போலீசில் அளித்த புகாரின்பேரில், மேலும் போலீசாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT