புதுக்கோட்டை

‘மாணவா் பாதுகாப்பு குழு அமைக்க நடவடிக்கை’

29th Mar 2022 03:34 AM

ADVERTISEMENT

போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவா்களைக் கண்டறியும் வகையில் மாணவா் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட உள்ளது என்றாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சாா்பில் அன்னவாசல் வட்டார வளமையத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த ஆசிரியா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பயிற்சி முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி பேசியது:

இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் பரவலாக பெருகிவரும் தீய பழக்க வழக்கங்களுக்கு மாணவா்கள் அடிமையாகாமல் தற்காத்துக் கொள்ளவும், அவ்வாறு போதை, மதுவுக்கு அடிமையாகும் மாணவா்களை ஆசிரியா்கள் இனம்கண்டு அவா்களை நல்வழிப்படுத்தவும் ஆசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது. இது சமூகத்திற்கும், மாணவா்களுக்கும் சவாலாகவும் மிகுந்த அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகும் உள்ளது. இதுதொடா்பாக மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், போதைப் பழக்கத்திலிருந்து மாணவா்கள் மீண்டு வரவும் பள்ளி அளவில் குழு அமைத்து கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், இலுப்பூா் மாவட்டக் கல்வி அலுவலா் செ. மணிமொழி, பள்ளி துணை ஆய்வாளா் கி. வேலுச்சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரகுநாத துரை, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ரோஸ் மேரி சகாய ராணி ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினா்.

இதில், அன்னவாசல் ஒன்றிய அரசு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT